நீதியரசர் இளஞ்செழியன் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையையும் அன்பையும் ரணில் மைத்திரி அரசு தவறாக கையாளுகிறதா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

264

 

நீதியரசர் இளஞ்செழியன் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையையும் அன்பையும் ரணில் மைத்திரி அரசு தவறாக கையாளுகிறதா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

elancheliyan_01

ரணில் மைத்திரி அரசு உருவாகிய பின்னர் யாழ்மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட நீதியரசர் இளஞ்செழியன் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் சொல்லும்படியான எந்தவொரு மாற்றங்களும் நிகழவில்லை.

1. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

2. பாலியல் சேட்டை புரிந்தவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

3. வாள்வெட்டு ரவுடிகள் (உண்மையான) யாரும் தண்டிக்கப்படவில்லை.

4. எல்லை மீறும் ஆட்டோ மற்றும் பேரூந்து ஓடடுணர்கள் தண்டிக்கப்டவில்லை.

இப்படி ஏராளமான விடையங்கள். இருக்கின்றன. எந்தவொரு ஆணித்தரமான நீதியும் வழங்கப்படவில்லை.

மாறாக

நீாதியரசரின் உத்தரவின் பேரில் அமைக்கபட்ட போலிஸ் கும்பல்

1. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளை குறிவைத்து தாக்குதல் (தொலைபேசி இலக்கங்களை கேட்டு மிரட்டிய சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன)

2. போக்குவரத்து பரிசோதனை என்ற பெயரில் பெண்களை மாத்திரம் மறித்து அதிக நேரம் உரையாடுவது தேவையில்லாத கதைகள் கதைத்து அவர்களின் அன்றாட வேலைக்கு இடையூறு விளைவிப்பது (அவதானித்துப் பாருங்கள்).

3. இரவு ரோந்து என்ற பெயரில் எந்தவொரு சமிஞ்சையும் இல்லாமல் திடீரென்று வாகனங்களை மறித்து அனாகரிகமாக நடப்பது. (இரவு நேரங்களில் வீதிகளில் வாகனங்களை மறிக்கும் பொலிசார் அதற்குரிய உடையோ உபகரணங்களோ இன்றியே காணப்படுகின்றனர்).

4. பல போலிசார் காலில் சப்பாத்து இல்லாமல் கையில் துப்பாக்கிகளுடன் வீதிகளில் திரிகின்றனர். (போலிசார் அப்படி திரிய முடியாது).

இவ்வளவு அட்டூழியங்களும் தமிழர் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்தான் நிகழ்கிறது. இப்படி சிங்களப் பகுதிகளில் நடந்தால் இப்போதைக்கு பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அரசியல் மட்டம் வரை சென்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE