
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் முன்னாள் மருமகன் தானுன திலக்கரட்னவினால், நீதி அமைச்சருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹை கோர்ப் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்ட காலத்தில் முடக்கப்பட்ட தமது வங்கிக் கணக்குகளில் காணப்படும் பணத்தை தொடர்ந்தும், நீதி அமைச்சர் முடக்கி வைத்திருப்பதாக தானுன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வழக்கில் தாம் குற்றமற்றவர் என நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பணத்தை முடக்கி வைத்திருப்பது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குகளில் காணப்படும் பணத்தை விடுவிக்குமாறு அமைச்சரிடம் கோரிய போதிலும் அவர் இதுவரையில் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே மனித உரிமை ஆணைக்குழுவில் மனு தக்கல் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.