இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ள போதிலும் விசேட நீதிமன்றம் குறித்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான உரிய பொறிமுறைகளை ஏற்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும், ஐ.நாவின் பரிந்துரைகளிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்,என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.