நீயா நானா என்றதும் கோபிநாத் சார் தான் ஞாபகம் வரும். ஒரு நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு செம ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றியதும் விறுவிறுப்பு இல்லாமல் போனது.
இந்த விவாத நிகழ்ச்சி சில சர்ச்சைகளை சந்தித்தாலும் பொறுமையாக அதை கையாண்டு வெற்றி பெற்றவர் அவர். சில படங்களில் அவரை சின்ன ரோல்களில் காணமுடிகிறது.
சென்னையில் ஒரு பிரபல உணவகத்தில் அவர் சாப்பிட வந்திருக்கிறார். அப்போது அங்கு பப்ளிக் பிராங்க் நிகழ்ச்சி செய்ய டேபிள் கிளீனர் போல வந்திருக்கிறார் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் சவித்ரன்.
டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த கோபியிடம் சாப்பிடும் போது போன் பேசாதீர்கள் என்று சொன்ன சவித்ரனிடம், கோபி எதையோ சொல்ல உடனே மேனேஜர் தொகுப்பாளரை திட்டினார்.
இதனால் அந்த பொது இடத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. பின் கோபி, சவித்ரனை திட்டாதீர்கள் என சொல்ல பின் பிராங்க் நிகழ்ச்சி என தெரிந்ததும் அவர் அதிர்ச்சியானார்.
ஆனால் நல்ல விசயம் என்னவெனில் உணவை வீணாக்க கூடாது என்று விழிப்புணர்வு..
காசு கொடுத்து விட்டு சாப்பிடாமல் உணவை வீணாக்கும் நம்மில் பலர் அதை உணவில்லாமல் கஷ்டப்படுவோருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது சினிஉலகத்தின் அன்பான வேண்டுகோள்..