காலி – பலப்பிட்டிய கடற்கரையில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலப்பிட்டிய கடற்கரையில் நீராடுவதற்கு இரு ஆண்களும் இரு பெண்களும் சென்றுள்ளனர். இதன்போது நால்வரும் நீரில்அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரு பெண்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரினது உடல்களை தேடும் பணி தொடர்கின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.