நீரில் மிதக்கும் அதிசொகுசு வீடு… கண்களை சொக்க வைக்கும் அழகு!…

275

விண்ணை முட்டும் கட்டிடக் கலைக்கும், உலகம் வியக்கும் கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்ற இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் டுபாய் திகழ்கின்றது.

இக்கட்டிடக் கலையின் மற்றுமொரு புரட்சியாக நீரில் மிதக்கக்கூடிய அதிசொகுசு வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி ஒவ்வொரு வீடும் 50 மீற்றர்கள் நீளமும், 30 மீற்றர்கள் அகலத்தினையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இவ் வீடானது 3 மட்டங்களைக் கொண்டதாகவும், அடிப் பகுதி கொங்கிரீட் மூலமே அமைக்கப்படவுள்ளது.

அதற்கு மேலுள்ள பகுதியில் 4 படுக்கையறைகள், பாத்ரூம், வேலைத்தளம், வசிப்பிடம், சமயலறை என்பன காணப்படும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இவ் வீட்டு மாதிரியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டும் வடிவமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE