நீரிழிவு நோயை மிக வேகமாக இனங்காணும் புதிய முறை உருவாக்கம்

199

குளுக்கோஸ் சகிப்புத்தன்மை முறையானது (Glucose Tolerance) நீரிழிவு நோய்களைக் கண்டறியும் நியம முறை.

ஆனால் ஒரு புதிய ஆய்வு முறையானது, நியம முறையிலும் முற்கூட்டியே நீரிழிவு நோயை அடையாளங்காண உதவுகின்றது.

நீரிழிவு நோயானது உலகளவில் வருடத்திற்கு 3.4 மில்லியன் மக்களின் இறப்பிற்குக் காரணமாகின்றது. இது தொடர்ந்தும் அதிகரிக்கக் காணப்படுகிறது.

இது இதய நோய்கள், அடிப்புக்கள் மற்றும் சிறுநீர்ப்பை செயலிழப்பு போன்ற துணை நோய்களை தோற்றவித்து மனிதரில் இறப்புக்களை ஏற்படுத்துகின்றன.

நீண்ட காலத்திற்கு நீரிழிவு நோயானது சிகிச்சையளிக்கப்படாது காணப்படின் இது இவ்வாறான நோய்களைத் தோற்றுவித்து பாரதூர விளைவுகளுக்குக் காரணமாகலாம். எனவே அதன் முற்கூட்டிய அடையாளம் காணல் மிக முக்கியம்.

நீரிழிவு நோயானது வகை – 1, வகை – 2 என இரண்டாக பிரிக்கப்படுகின்றது.

இங்கு வகை – 1 ஆனது உடல் சதையிக் கலங்களை அழிப்பதால் உருவாகின்றது.

வகை -2 ஆனது முன்னேற்றமடையும் நோய் நிலைமை. இதன் போது முதலில் உடல் இன்சுலினுக்கு எதிப்புடையதாகின்றது. பின்னர் சதையிக் கலங்கள் தேய்ந்து போகின்றது. விளைவாக குருதி வெல்ல அளவு மிக உயர்வடைகிறது.

இங்கு ஆய்வாளர்கள் உடல் எவ்வாறு இன்சுலினுக்கு எதிப்புடையதாக மாறுகின்றது என்பது பற்றி ஆராய முற்பட்டனர். இதன்போது இவர்கள் குளுக்கோசுக்குப் பதிலாக கொழுப்பு மூலக்கூறை அவதானித்திருந்தனர்.

பொதுவாக அதிக எடை கொண்டவர்களில் அவர்கள் உணவு உட்கொள்ளும்போது அதிலுள்ள கொழுப்பை adipose tissue எடுத்துக் கொள்வதில்லை. மாறாக இது உடலின் ஈரல் மற்றும் தசைக்கலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இது அங்கு இன்சுலின் எதிர்ப்புத் தன்மைக்கு காரணமாகின்றது.

இங்கு எலிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் adipose tissue சேதமாக்கப்பட்டிருந்த போது அவை ஆரோக்கிய உணவை உள்ளெடுத்திருந்த போதிலும் அநுசேப ரீதியாக நோய்வாய்ப்பட்டுக் காணப்பட்டிருந்தன.

இதிலிருந்து ஆநுசேப நோய்களுடன் தொடர்புடைய நோயாளர்கள் அதன் ஆரம்பநிலையிலேயே glucose tolerance சோதனையில் குளுக்கோசுக்குப் பதிலாக குளுக்கோசு, கொழுப்பு மற்றும் புரதம் கொண்ட மில்க்ஷேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டறியலாம் என்கின்றனர்.

SHARE