நீரிழிவு நோய்

409

தினசரி இரவில் சிவப்பு ஒயின் மதுவைக் குடிப்பது, ‘டைப்-2’ நீரிழிவு நோய்க்கு மருந்தாக அமைகிறது என சமீபத்திய மருத்துவ ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் நெகேவ் நகரில் உள்ள பென்-குரியான் பல்கலைக்கழகம், கடந்த 2 ஆண்டுகளாக ‘டைப்-2’ நீரிழிவு நோய் தாக்கிய 224 பேரிடம் ஆய்வை மேற்கொண்டது.சிவப்பு ஒயினைப் பருகியவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம், சீரான ஜீரண சக்தி மட்டுமல்லாது இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான எச்.டி.எல். கொழுப்பு அதிகரித்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, நாள்தோறும் ஐந்து அவுன்ஸ் சிவப்பு ஒயின் அருந்துபவர்களின் உடல்நலத்தைப் பாதுகாத்து, அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், முதியோருக்கு ‘டிமென்சியா’ என்ற மறதி நோயையும் அகற்றுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சி குழு தகவல் வெளியிட்டு உள்ளது. – See more at:

SHARE