கடந்த 2015 இல் 96 மில்லியன் மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகள் லோஸ் ஏன்ஜல் பகுதியிலுள்ள ஒரு நீர்த் தேக்கத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
இது ஆவியீர்ப்பைக் குறைத்து நிரைச் சேமிக்கும் ஒரு திட்டமாக பார்க்கப்பட்டிருந்தது. அது நீரைச் சேமிப்பதில் வெற்றியும் அளித்திருந்தது,
ஆனால் அங்கு பெரிய நீர் யானை இருந்தது யாராலும் கவனிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது.
அதாவது இப் பந்துகள் தாங்கள் சேமிக்கும் நீரிலும் அதிகமான நீரை தாங்களே பயன்படுத்திக் கொண்டன.
அண்மையில் ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த கணிப்புகளின் படி எண்ணை, இயற்கை வாயுக்கள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இப் பிளாஸ்டிக் பந்துகள் 2.9 மில்லியன் கன மீட்ர்கள் தண்ணீரை உள்ளெடுத்திருக்கலாம் என தெரியவருகிறது.
இப் பந்துகள் மேற்படி நீர்த் தேக்கத்தில் 2015 ஓகஸ்டு தொடங்கி 2017 மார்ச் வரையிலான காலப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இக் கால கட்டத்தில் 1.7 மில்லியன் கன மீட்டர் நீர் ஆவியாதலிலிருந்து தடுக்கப்பட்டது.
முடிவில் இத் திட்டம் தோல்வியடைந்திருந்தாலும் ஆரம்ப காலத்தில் ஒரு சிறப்பான திட்டமாக பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.