நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

487

பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ் பெரி தோட்டத்திலுள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (07-11-2018)  காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 41 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் செல்லும் வழியில் பாலமொன்றை கடக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து மரணம் நிகழ்ந்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு (06-11-2018) இடம்பெற்றுள்ளது

நீரோடையில் சடலம் இருப்பதை கண்ட பிரதேச மக்கள் திம்புள்ள – பத்தனை பொலிஸாருக்கு வழங்கிய தாவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்தது சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான நாவலப்பிட்டி வைத்தயசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE