நீர்க்கொழும்பு – கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் மூன்றும் உள்நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றும் மெகசின் இரண்டும் மற்றும் துப்பாக்கி ரவைகள் நான்கும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.