நீர்கொழும்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் – கார்தினால்

214

download-4

நீர்கொழும்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கோரியுள்ளார்.

கொழும்பு நிதி நகர் நிர்மானத்தினால் நீர்கொழும்பு மீனவர் சமூகம் எதிர்நோக்கக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தலையீடு செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிதி நகர் அமைக்கும் பணிகளுக்காக பாரியளவில் கடல் மணல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் நீர் கொழும்பு மற்றும் திக்ஒவிட்ட கடல் பகுதிகளில் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து மீனவர்களும் நானும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கடல் மணல் அகழ்வினால் பிரதேசத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து மீனவர் சமூகம் பீதியடைந்துள்ளது. மணல் அகழ்வினால் பிரதேச மக்களின் வாழ்வாதாரதம் பாரியளவில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் எதிர்நோக்கக்கூடிய இந்த ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் உடன் கவனம் செலுத்தி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றாடல் அழிவுகள் குறித்து எவ்வித ஆய்வு மதிப்பீடுகளையும் மேற்கொள்ளாது கடந்த அரசாங்கம் துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டது.

இந்தப் பிரச்சினைக்கு தற்போதைய அரசாங்கம் காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கோரியுள்ளார்.

SHARE