நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலி நோய்களை நீக்கும் ஆசனம்

276
தலைவலியை போக்கும் யோக முத்திராசனம்

ராஜ யோகிகள் நீண்ட நேரம் தவத்தில் ஆழ்ந்திருக்க முதுகெலும்பு, முதுகு வலுவாக நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு ஒட்டி இருக்க வேண்டும், தொந்தியை கரைத்து, முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனம் யோகமுத்திராசனம், ராஜயோக சாதகருக்கு உதவும் ஆசனமாதலால் யோகமுத்திராசனம் எனப் பெயர் பெற்றது.

செய்முறை :

தரைவிரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். இரு குதிங்கால்களையும் உள்ளங்கையால் மூடிக் கொள்ளவும். முதுகை வளைத்து குனிந்து தரைவிரிப்பை மூக்கால் தொடவும். சுவாசத்தை விட்டுக் கொண்டே நிமிரவும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்யவும். இதுவே யோக முத்திராசனம் ஆகும். இந்த ஆசனத்தை பெண்களும் செய்யலாம்.

பலன்கள் :

நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலி ஆகிய நோய்களை நீக்கும்.

முதுகெலும்பை பாதுகாக்கும்.

தொந்தியை முழுவதுமாக கரைக்கும்.

மார்பை விரிவடையச் செய்யும்.

Related Tags :
SHARE