உடலில் ஏற்படும் ஒருசில அறிகுறிகளை வைத்து, நம் உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள்
- நீர்ச்சத்து குறைவினால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு, உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து, செரிமானத்தில் பல சிக்கல்கள் ஏற்படும்.
- நம் உடலில் நீர் வறட்சி உள்ளது அல்லது போதியளவு நீர்ச்சத்து இல்லை எனில், முகப்பரு அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கு போதியளவு நீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.
- சூரிய கதிர் மற்றும் வெப்பம் அதிகமாக வெளிப்படும் இடத்தில் அதிக நேரம் இருந்தால், உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, வெங்குரு மற்றும் வேனிற்கட்டி போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
- உடலில் அதிகப்படியான நீர் வறட்சி ஏற்பட்டால், கண்களுக்கு கீழே குழி இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட ஆரம்பித்து விடும்.
- மூக்கின் சருமம் வறட்சியாக மாறுவதுடன், ஒருவித எரிச்சல் உணர்வுகள் ஏற்படும். இப்படி இருந்தால், உங்கள் உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லை என்பதற்காக அறிகுறியாகும்.
- அன்றாடம் சரியான அளவு தண்ணீரை குடித்து வரவில்லை எனில் உடம்பில் ஆல்கஹால் போதை அதிகமாக இருக்கும். எனவே இதை தடுக்க தினமும் போதியளவு நீரைக் குடிக்க வேண்டும்.
தடுக்க செய்ய வேண்டியவை
- எண்ணற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. எனவே அத்தகைய காய்கறிகள் மற்றும் பழங்களை அவ்வப்போது சாப்பிடலாம்.
- உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருந்தால், உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல், பொடுகு, போன்ற எவ்வித தொல்லைகளும் இல்லாமல், தலையின் ஆரோக்கியம் மேம்படும்.
- முடி மற்றும் நகங்கள் வலிமையாக இருக்கும். முடி உதிர்தல், முடி உடைந்து போகுதல் போன்ற எந்த பிரச்சனைகளும் இருக்காது.
- தினமும் சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, கண் பார்வைகள் கூர்மையாக இருக்கும்.
- அன்றாடம் உணவு சாப்பிடுவதற்கும் 20 நிமிடங்களுக்கு முன் 2 கப் நீர் குடித்து வந்தால், உடல் எடையை எப்போதும் சீராக வைத்துக் கொள்ள முடியும்.
- எப்போதும் வெளியே செல்லும் போது ஒரு பாட்டில் நீரை கொண்டு செல்லுங்கள். இதனால் தாகத்தின் போது உடனே தண்ணீர் குடிக்கலாம்.
- முக்கியமாக உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்