நீர்நிலைகளில் இருந்து இளைஞர்களின் சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன?

317

மலையகத்தின் இருவேறு பகுதிகளிலுள்ள நீர்நிலைகளிலிருந்து 28 வயதுடைய ரவிச்சந்திரன் சுரேந்திரன் , 39 வயதுடைய பெருமாள் நாகராஜ் ஆகியோரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலவாக்கலை, மிட்டில்டன் தோட்டத்தில் உள்ள வடிக்கானிலிருந்து ரவிச்சந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞனின் சடலத்தை நேற்று (06) மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வடிகானில் சடலம் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு பூண்டுலோயாவிலுள்ள ஆற்றிலிருந்து பெருமாள் நாகராஜ் என்பவரின் சடலத்தையும் பூண்டுலோயா பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE