தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டலும் அதில் பல தூரோகிகளும் இணைந்துக் கொள்ளப்பட்டனர் குறிப்பாக ரெலேர், புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களின் தலைவர்களையும் சுட்டுக் கொல்லுமாறு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பொட்டு அம்மான் அவர்களிடமும், கருணா அம்மான் அவர்களிடமும் பணித்திருந்தார். இன்றையே நிலையில் துரோகி என்கின்ற பொழுது அதன் காரணங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
தமிழ் மக்களுக்கான தேசியம் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்ட நிலையில் அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய தலைவர்கள் குரல் எழுப்புவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு ஒன்று.
பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் அதனைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையினை வடமாகானசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்தும் பெற்றுத் தரமுடியாமல் போனது.
இடைக்கால அறிக்கையில் கோட்டை விட்டது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கவனம் செலுத்தாதமை.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அக்கறை செலுத்தாதமை.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருசனை கொள்ளாதது.
தற்பொழுது இருக்கக் கூடிய அரசாங்கத்தை ஆதரித்து நல்லாட்சி என்று அவர்களை தமிழ் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி வாக்குகளைப் பெற்று தமிழினத்தை ஏமாற்றியது.
போர்க்குற்ற விசாணையிலிருந்து மகிஹிந்த ராஜபக்ஷhவை காப்பாற்றி போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கையை தப்ப வைத்தது.
போன்றவை இவர் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள். இதே போன்று சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் அவர்கள் முன்னால் ஜனாதிபதி சத்திரிக்கா பண்டாரநாயக்காவின் சட்ட ஆலோசகராகத் திகழ்ந்தார். இலங்கையினுடைய யாப்புச் சீர் திருத்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார். அது தமிழீனத்திற்கு பாதகமானதாக அமையப்பெற்றது. அதனாலேயே நீலன் திருச்செல்வம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னால் மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் இவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு சகுனியாக மாறியவர். அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடை செய்தவர் இந்த லக்ஸ்மன் கதிர்காமர். அவர் ஒரு தமிழனாக இருந்தும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்னும் பதவியை சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள் வழங்கியிருந்தார். இவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.
சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய புலிகளுடன் பேச அரசு முயற்சித்தது.
ஆனால் ஒப்பந்தத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஒப்பந்தம் சுமுகமாக செயற்படும் என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப் பிரச்சனை பேசப்பட்டிருக்கும் தருணத்தில் வெளியுறவு அமைச்சரும், இலங்கை அமைச்சரவையில் மிக முக்கியமான உயர் பதவியை வகித்த தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி இரவு 11 மணிக்கு புலிகளால் மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது படுகொலை சர்வதேச அளவில் மிகவும் கவனத்தை ஈர்த்திருந்ததை அவரது மரணச் சடங்கில் கலந்துகொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகளின் தொகை சாட்சியமாக அமைந்தது.
இவரது படுகொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்த புலிகள் அது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படும் தெற்கிலுள்ள சக்திகளின் செயல் என விளக்கமும் அளித்திருந்தனர்.
ஆனால் அங்கு காணப்பட்ட தடயங்கள் வேறு விதமாக அமைந்திருந்தன.
அமைச்சரின் இல்லத்திற்கு 100 யார் தூரத்தில் அமைந்த வீடு ஒன்றில் ஓர் அறை மிகவும் திட்டமிட்டே அமைக்கப்பட்டது போல் அமைச்சரின் உள்வீட்டு சம்பவங்களை மிக நிதானமாக அறியும் வகையில் யன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன.
துப்பாக்கி பொருத்துவதற்கான முக்காலி அந்த யன்னல் அருகில் விடப்பட்டிருந்தது.
அத்துடன் பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களும் அங்கு கிடந்தன. மிக நீண்ட நாட்களாக திட்டமிட்டு அக் கொலை நிறைவேற்றப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்தன.
இப் படுகொலை தொடர்பாக அன்றைய மந்திரி சபை பேச்சாளரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் புலிகளின் மறுப்பை தம்மால் ஏற்றுக் கொள்வது கஸ்டமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதி சந்திரிகா இன்னும் ஒரு படி மேலே போய் விடுதலைப்புலிகளே அப் படுகொலையை மேற்கொண்டனர் என தொலைக் காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி அமைச்சரின் மரணச் சடங்கு 12 நாடுகள் தமது உத்தியோகபூர்வ பிரதிநிதிகளை அனுப்பியதோடு மிக அதிகமான ராஜ தந்திரிகளும் கலந்துகொண்டனர்.
இச் சந்தர்ப்பத்தில் நோர்வே தூதுவர் இரு சாராரும் போர்நிறுத்த ஒப்பந்தம் செவ்வனே செயற்பட தமது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கதிர்காமரின் படுகொலை நிலமைகளை மேலும் துரிதப்படுத்த உதவியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது தொடர்பாக நோர்வேயினர் பாலசிங்கத்துடன் பேசியபோது….
உருப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்ளவேண்டுமென நோர்வே வெளியுறவு அமைச்சர் வற்புறுத்தினார்.
இவற்றைத் தொடர்ந்து இரு சாராரும் சந்திப்பதற்கு இணங்கினர்.
ஆனால் எங்கு சந்தித்துப் பேசுவது? என்பதில் இழுபறிகள் ஆரம்பித்தன.
ஒஸ்லோவில் சந்திப்பதை இரு சாராரும் விரும்பாத நிலையில் கிளிநொச்சியில் அல்லது கொழும்பில் சந்திக்கவும் தயங்கினார்கள். இறுதியில் நோர்வே தூதுவரின் ஆலோசனையின் அடிப்படையில் இரு சாராராருக்கும் பொதுவான ஓமந்தையில் சந்திக்கலாமா? என வினவினார்.
இவ் இழுபறிகளுக்கு மத்தியில் தேர்தல் நிலமைகள் கவனத்தை ஈர்த்ததால் அவை சாத்தியமாகாமல் போயின.
சகல பிரச்சனைகளுக்கும் ராணுவ அடிப்படையிலான தீர்வை பிரபாகரன் நம்பியதாக பல கதைகளைக் கூற முடியும் என எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.
கதிர்காமரின் படுகொலை சமாதான முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்ததாகவும், கதிர்காமர் இருக்கும் வரை பேச்சுவார்த்தைகள் தமக்குச் சாதகமாக அமையப் போவதில்லை என்பதை புலிகள் உணர்ந்து கொண்டனர்.
ஏனெனில் அவரே பல நாடுகளின் மேல் புலிகளைத் தடை செய்யுமாறு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தார். அதனால் அவரை இலக்கு வைத்திருந்தனர்.
ஆனால் நோர்வே தூதுவரின் கருத்துப்படி தாம் மகிந்தவுடன் பேசியபோது தாம் ஜனாதிபதியாக வந்தால் சமஷ்டித் தீர்வை பிரபாகரன் முன்னிலையில் வைக்கப்போவதாகவும், 6 மாதங்களுக்குள் புலிகளுடன் ஓர் உடன்பாட்டிற்குச் செல்லப்போவதாகவும் அச் செய்தியைப் பாலசிங்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மகிந்த தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் தூதுவர் கூறுகிறார்.
மகிந்தவின் திட்டங்களை அவதானித்த போது அவர் பிரபாகரனுடன் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தேர்தலைப் பகிஷ்கரித்த நிகழ்வுகளும் முடிவுகளை ஆராய்வதில் சிக்கலாகவே இருந்தன என்கிறார்.
சந்திரிகா தனது பதவியை இன்னும் ஒரு வருடம் நீடிக்க எடுத்த முயற்சிகள் உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
ஆனால் மகிந்த எவ்வாறு செயற்பட்டார்? என்பது இங்கு முக்கியமானது.
ஜே வி பி உடன் ஒப்பந்தத்திற்குச் சென்றார். அவர்கள் சமஷ்டியை எதிர்த்து ஒற்றை ஆட்சியில் நிர்வாகப் பரவலாக்கம் என்றனர்.
2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றனர். ஜாதிக கெல உறுமய இனர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எதிர்த்தனர்.
இந் நிலையில் மகிந்த அமெரிக்கர்களுக்கு கூறியது என்ன? என்பது அமெரிக்க தூதரகம் 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அனுப்பிய தகவலில் வெளியானது.
ஜனாதிபதி வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியால் அறிவிக்கப்பட்டதும், மகிந்தவிற்கு அமெரிக்க தூதுவரிடமிருந்து கொளரவிக்கும் தொலைபேசி அழைப்புச் சென்றது.
அவ் அழைப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜே வி பி உடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அவ் ஒப்பந்தம் சமாதான முயற்சிகளுக்கு எதிராக காணப்படுவதாகவும், அவ் ஒப்பந்தம் சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒன்று என்பதைத் தெரிவித்தார்.
இதற்கு அதைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும், தேர்தலுக்கு அவர்கள் ஆதரவு தேவை எனவும், அவர்களைக் கையாள்வதில் தனக்கு அனுபவம் உண்டு எனவும் அதனால் அவர்களுக்கு எது தேவையோ அதற்கு தான் ஆதரிப்பதாக தெரிவித்தாகவும் கூறினார்.
அப்போது அவ் ஒப்பந்தம் நோர்வேயினரை அதிலிருந்து நீக்குவதாக கூறுகிறதே? எனக் கேட்டபோது அம் முயற்சியை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது என மகிந்த கூறினார்.
அவ்வாறானால் பிரதமர் அது தொடர்பாக பகிரங்க அறிக்கையை வெளியிட்டாலென்ன? என தூதுவர் வினவியுள்ளார்.
தான் அவ்வாறு செய்தால் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் எனவும், 98 சதவீதமான தெற்கிலுள்ள சிங்கள மக்கள் நோர்வேஜியர்கள் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நம்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இப் பின்னணியில் நோர்வேயில் இடம்பெற்ற தேர்தலில் சோல்கெய்ம் சார்ந்திருந்த இடதுசாரிக் கட்சியான தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதன் காரணமாக சோல்கெய்ம் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இலங்கைத் தேர்தலும் சூடு பிடித்த நிலையில் கூட்டுத் தலைமை நாடுகள் அமெரிக்காவில் சந்தித்தன.
கதிர்காமரின் படுகொலையைக் கண்டித்த இந் நாடுகள் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு மிகவும் அமைதியோடு செயற்பட்டதைப் பாராட்டினர்.
விடுதலைப்புலிகள் தாம் சமாதான முயற்சிகளில் அக்கறை இருப்பதை உடனடியாக தமது செயற்பாடுகளில் காட்டவேண்டுமெனவும், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமே நிரந்தர தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தனர்.
இவ் அறிக்கை வெளியாகிய 10 நாட்களில் புலிகள் மீதான பிரயாணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது.
கதிர்காமரின் படுகொலையைத் தொடர்ந்து இம் முடிவு எடுக்கப்பட்டதாக காணப்பட்டது. அத்துடன் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவும் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகியது.
இச் செய்தி புலிகள் தரப்பினர் மத்தியில் பெரும் கலக்கத்தை அளித்தது.
இவ் உத்தரவு சமாதான முயற்சிகளைப் பெரிதும் பாதிக்கும் எனவும், சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குலைந்துள்ளதாகவும் தமிழ்ச் செல்வன் அறிக்கை விடுத்தார்.
ஒக்டோபர் 6ம் திகதி நோர்வே தூதுவர் தமிழ்ச்செல்வனைச் சந்த்தித்தபோது தடை தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால் அச் சந்திப்பில் மிகவும் கடுமையான தொனியில் புலிகளின் நடவடிக்கைகளை தாம் விமர்ச்சித்ததாக தூதுவர் பின்னர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின்போது ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்தும் வைத்திருக்கும் போக்கைக் கைவிடுமாறும், பி ரொம் கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்துமாறும் சந்திரிகா தனது கட்சி மூலமாக மகிந்தவிற்கு வேண்டுகோள் விடுத்தும் அவை சாத்தியமாகவில்லை.
பதிலாக தாம் பிரபாகரனுடன் நேரடியாக பேசப் போவதாகவும், மூன்று மாதங்களுக்குள் தேசிய உடன்பாட்டை எட்டப் போவதாகவும் மகிந்த தெரிவித்தார்.
ஆனால் நிலமைகள் தலைகீழாக மாறின. 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் என்ற பெயரில் மக்கள் திரட்டப்பட்டனர்.
சுமார் 2 லட்சம் மக்கள் திரண்டனர். தமிழர் தாயகத்திலிருந்து ராணுவமே வெளியேறு என்ற கோஷங்கள் ஒலித்தன. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. சிங்களப் பகுதிகளிலும் அரசியல் போக்குகள் புதிய வடிவமெடுத்தன.
இன்றைய சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் மௌனிக்கப்பட்டதன் காரணமாக மூன்றாவது தமிழினத்தின் துரோகி சுமந்திரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் என்பது அனைவரதும் கருத்து. இது எவ்வாறு இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு ஆழுமையாகக் கொண்டு செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பல்வேறு முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றார். இவருடைய மொழியாற்றல், அறிவாற்றல் திறமை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு இல்லை என்பது வெளிப்படையான உண்மை.
சுமந்திரன் 1964 பெப்ரவரி 9 இல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம்இ இணுவிலில் பிறந்தார்.இவரது குடும்பம் வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கரவெட்டியைச் சேர்ந்தவர். தாயார் குடத்தனையைச் சேர்ந்தவர்.கொழும்பில் வளர்ந்த சுமந்திரன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார்.பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்
சந்திரிக்காவை காப்பாற்ற தமிழர் கூட்டணி தலைவர்கள் செய்த மோசடி
ஆயுதக்குழுக்களுடன் தேர்தலில் போட்டியிட்டு சூடுகண்ட பூனையாக தாம் இருப்பதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவராக இருந்த ஜோசப் பரராசசிங்கம் அச்சம் தெரிவித்தார். ஆரம்பத்தில் தமிழ் இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள ஜோசப் பரராசசிங்கம் போன்றவர்கள் கடும் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து 1989ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் அக்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எவ்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய இயக்கங்கள் போட்டியிட்டன. தலைமை வேட்பாளர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்களே போட்டியிட்டனர். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அ.அமிர்தலிங்கம் தலைமை வேட்பாளராக போட்டியிட்டார்.
அத்தேர்தல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும் சோதனையாகவும் வீழ்ச்சியாகவும் அமைந்தது. யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மூவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள். மட்டக்களப்பில் ரெலோ உறுப்பினர் ஒருவரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் இருவரும் தெரிவாகினர். அம்பாறையில் ரெலோ உறுப்பினர் தெரிவானார். வன்னியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் இருவர் தெரிவாகினர். பழம் பெரும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து ஒருவர் கூட தெரிவாகவில்லை. தமிழ் இயக்கங்கள் கள்ளவாக்கை போட்டு தம்மை தோற்கடித்து விட்டன என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தேர்தல் முடிந்த பின்னர் வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.
இனிமேல் தமிழ் இயக்கங்களுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்திருந்தது. இந்த கசப்பான அனுபவத்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற இயக்கங்களுடன் இணைந்து தேர்தல் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தயக்கம் காட்டினர்.
அக்காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இரு அணிகளாகவே செயல்பட்டன. ஒரு அணி ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமாக செயற்பட்டது. மற்ற அணி விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டது.
ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமான அணியில் ஆனந்தசங்கரி, சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இருந்தனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அணியில் ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, போன்றவர்கள் இருந்தனர்.
ஜனாதிபதி சந்திரிக்கா தமிழர்களுக்கு உரிமையை வழங்கி பிரச்சினையை தீர்த்து வைப்பார் என சம்பந்தன் அணியினர் கூறிவந்தனர். சந்திரிக்கா அம்மையானர் ஒரு பொதியை வைத்திருக்கிறார். அதன் மூலம் தீர்வு நிட்சயம் கிடைக்கும் என சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் தரப்பினர் நம்பினர். சந்திரிக்காவின் பொதியை தயாரித்தவர் நீலன் திருச்செல்வம் தான் என அக்காலப்பகுதியில் பேச்சு அடிப்பட்டது.
சந்திரிக்காவுக்கு நெருக்கமாக செயற்பட்ட அணி சந்திரிக்காவுக்காக கள்ள கையெழுத்து இட்டு அறிக்கை வெளியிட்ட சம்பவம் இந்த இரு அணிகளுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. கள்ள கையெழுத்து விவகாரம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச்சபை கூட்டத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
சமாதானபுறா வேசம் போட்டு தமிழர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா ஜனாதிபதியாகிய கையோடு தன்னுடைய சுயரூபத்தை காட்டத்தொடங்கினார் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 1999 ஆம் ஆண்டு காலப்பகுதி.
கொழும்பில் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்ட போது விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் திட்டம் இருப்பதாக தகவல் கூறப்பட்டது.
புலிகள் கொழும்பை தாக்கினால் தமிழர்களை நானே தலைமை தாங்கி தாக்குவேன் என கொழும்பில் பிரமுகர்களுடனான சந்திப்பின் போது சந்திரிக்கா எச்சரித்தார்.
சண்டேலீடர் பத்திரிகையில் குமார் பொன்னம்பலம் இதை ஆதாரத்துடன் வெளியிட்டார்.
நாட்டின் ஜனாதிபதி அந்த நாட்டில் இருக்கும் இன்னொரு இனத்தை நானே தலைமை தாங்கி கொலை செய்வேன் என கூறுவது எவ்வளவு பாரதூரமான விடயம். வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகள் மட்டத்திலும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.
சந்திரிக்காவின் இப்பேச்சு தமிழர்கள் மட்டத்திலும் பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குமார் பொன்னம்பலம் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் ஜனாதிபதி சந்திரிக்காவை மிகக்கடுமையாக சாடிவந்தார். அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா அம்மையார் சொல்லவில்லை என்றும் அவர் தமிழர்களை நியாயமாக நடத்தும் ஒரு தலைவர் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சகல ஊடகங்களுக்கும் அனுப்பபட்டிருந்தது.
நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா கூறினாரா இல்லையா என தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எப்படி தெரியும்? தமிழர் விடுதலைக்கூட்டணி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை,
அப்படியானால் ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை விட்டது? தமிழர் விடுதலைக்கூட்டணி ஏன் இதில் மூக்கை நுழைத்து கொண்டது?
சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமானவர்கள் என கருதப்படும் சிலர் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என சந்திரிக்கா கூறியதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தமிழர்கள் என்று சொல்லப்போனால் இலங்கை வங்கியின் தலைவராக இருந்த ராஜன் மட்டுமே அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
சந்திக்கா பேசிய விடயம் எப்படி வெளியில் போனது? தமிழர் என்ற காரணத்தால் ராஜன் மீது சந்திரிக்காவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இலங்கை வங்கி தலைவர் பதவியிலிருந்து ராஜன் தூக்கி எறியப்பட்டார்.
இந்த விடயத்தை ராஜன் தனக்கு சொல்லவில்லை என்றும் வேறு ஒருவர் மூலமே ஆதாரத்துடன் பெற்றதாக குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
சந்திரிக்காவை காப்பாற்றும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை கூட கள்ள கையொப்பம் இட்டு மோசடியான முறையிலேயே வெளியிடப்பட்டிருந்தது.
நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என தான் கூறியது எப்படியோ அம்பலமாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தார் சந்திரிக்கா, தனது ஆலோசகரான நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார் சந்திரிக்கா, அங்கு சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் தாங்கள் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக உறுதியளித்து விட்டு வந்தார்.
அக்காலப்பகுதியில் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகிய மூவர் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தனர்.
அந்த நேரத்தில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தார். தலைவர் சிவசிதம்பரம் சுகயீனமுற்றிருந்தால் தலைவருக்குரிய பணிகளை ஆனந்தசங்கரியே செய்து வந்தார். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சம்பந்தன் கொழும்பில் இருக்கவில்லை. கட்சியின் செயலாளரே அனைத்து அறிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டும்.
சந்திரிக்கா அம்மையாரின் களங்கத்தை போக்க நீலன் திருச்செல்வம் அறிக்கையை தயாரித்தார். அறிக்கையின் கீழ் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் என சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டது. சம்பந்தன் என கள்ள கையொப்பத்தை வைத்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான்.
நீலன் திருச்செல்வத்தின் அலுவலகத்திலிருந்தே சகல பத்திரிகைகளுக்கும் தொலைநகல் மூலம் அறிக்கை அனுப்பட்டது. சண்டேலீடர் பத்திரிகைக்கும் ஒரு பிரதி அனுப்பட்டது. சண்டேலீடர் அலுவலகத்தில் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவும் குமார் பொன்னம்பலமும் பேசிக்கொண்டிருந்த போதே தொலைநகல் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கை அங்கு வந்து சேர்ந்தது. அந்த அறிக்கையை லசந்த விக்கிரசிங்க குமார் பொன்னம்பலத்திடம் காட்டினார்.
குமார் பொன்னம்பலம் நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என்ற சந்திரிக்காவின் சர்ச்சைக்குரிய விடயத்தை சண்டே லீடரில் எழுதிவருபவர் என்ற ரீதியிலும் லசந்த அந்த அறிக்கையை குமாரிடம் காட்டினார்.
அறிக்கையை பார்த்தவுடன் குமார் உடனடியாக சொன்னார். இதில் பெரிய மோசடி இருக்கிறது. இது சம்பந்தனின் கையொப்பம் இல்லை. நீலன் தான் ஆர்.சம்பந்தன் என்று கையொப்பம் வைத்திருக்கிறார் என்றார் குமார் பொன்னம்பலம்.
சண்டே லீடர் பத்திரிகையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இந்த கையெழுத்து மோசடி பற்றியும் குமார் பொன்னம்பலம் விலாவாரியாக எழுதினார்.
ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் வைப்பது கிரிமினல் குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சம்பந்தனின் உண்மையான கையொப்பம், நீலன் திருச்செல்வம் இட்ட கையெழுத்து எப்படி இந்த கள்ள கையொப்பத்திற்கு பொருந்துகிறது என்பதை படங்களுடனும் ஆதாரங்களுடனும் சண்டே லீடர் வெளியிட்டது.
அக்காலப்பகுதியில் நான் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். சில வருடங்களுக்கு முதல் விடிவானம் பத்திரிகை உரிமையாளர் மனோ இராசசிங்கம் குமார் பொன்னம்பலத்துடன் தொலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். மனோ இராசசிங்கத்தின் மனைவி சாந்தி சச்சிதானந்தம் ஒருநாள் என்னை கொழும்பில் வைத்து குமார் பொன்னம்பலத்திற்கு நேரில் அறிமுகப்படுத்தி வைத்தார். சாந்தி குமார் பொன்னம்பலத்தின் உறவினரும் கூட.
1991ஆம் ஆண்டு யூன் 12ஆம் திகதி இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மட்டக்களப்பில் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக குமார் பொன்னம்பலம் சமூகமளித்தார். மட்டக்களப்பில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுடனேயே தங்கியிருந்தார். அப்போது குமார் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்த போதிலும் நெருக்கமான தொடர்பு கிடையாது.
விடிவானம் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்திலேயே குமார் பொன்னம்பலத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மட்டக்களப்பில் நடைபெறும் கடத்தல்கள், கைதுகள், கொலைகள் பற்றிய விபரங்களை பெறுவதற்காக என்னுடன் குமார் பொன்னம்பலம் அடிக்கடி தொடர்பு கொள்வார்.
அந்த தொடர்பினால் விடிவானம் பத்திரிகைக்கும் தான் வெளியிடும் அறிக்கைகள் கட்டுரைகளை குமார் அனுப்புவார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கள்ள கையொப்ப அறிக்கை விவகாரத்தையும் குமார் பொன்னம்பலம் சகல ஆதாரங்களுடன் அனுப்பியிருந்தார். அதனை விடிவானம் பத்திரிகையில் பிரசுரித்தோம்.
கள்ள கையெழுத்து விவகாரம் அம்பலமானதை அடுத்து சம்பந்தன் ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் என்னுடைய கையெழுத்தை வைத்தார் என்று.
சட்டம் தெரிந்தவர்கள், மெத்தபடித்தவர்களின் இந்த முட்டாள் தனங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என மௌனமாக இருந்தனர் தமிழ் மக்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் மத்தியில் நீலன் திருச்செல்வம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்களின் நடவடிக்கைகள், சர்வாதிகாரப்போக்குகள், தன்னிச்சையான முடிவுகள் பற்றி கடும் அதிருப்தியும் ஆட்சேபனையும் எழுந்தன.
அடுத்த வாரம் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை காரியாலயத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. காரசாரமான விவாதங்கள் நடந்தன.
சந்திரிக்காவுக்காக வக்காலத்து வாங்கியது தேவையற்ற செயல். தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை செய்திருக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட சிலர் கூறினர். சந்திரிக்கா அப்படி கூறினாரா இல்லையா என ஆரூடம் கூறுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு என்ன தேவை இருக்கிறது என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி மீது கண்டனங்கள் எழுந்தன. கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. அன்று மாலை நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தனர். நீண்டநேரம் பேசினர். என்ன பேசினர் என்பது யாருக்கும் தெரியாது.
மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது கட்சிக்கு தெரியாமல் தனியாக சம்பந்தன் சந்தித்து வந்தார். அது போல சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் சந்திப்பது வழமை.
தங்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என ஜனாதிபதி சந்திரிக்காவிடம் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகியோர் முறைப்பாடு செய்ததை அடுத்து மூவருக்கும் குண்டு துளைக்காத கார்கள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது.
ஆனந்தசங்கரி, சம்பந்தன் ஆகியோருக்கு கொழும்பில் பாதுகாப்புடன் கூடிய வீடுகளும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது. அந்த வீடுகளிலேயே சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் இப்போதும் இருப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் நடைபெற்று சிறிது காலத்தில் 29.07.1999 அன்று கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலில் நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றிய பேச்சுக்கள் ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா ஆகியோருடனேயே நடந்தப்பட்டது
2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இணையஇ இலத்திரனியல் சட்டத்தின் முதுகலைப் பட்டம் பெற்றார
சுமந்திரன் மெதடிய கிறித்தவர் ஆவார்.இலங்கை மெதடிசத் திருச்சபையின் துணைத் தலைவராக உள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் சுமந்திரன் உரிமையியல் வழக்குகளில் மேன்முறையீட்டு உயர் மற்றும் மாவட்ட நீதி மன்றங்களில் வாதாடி வருகிறார்.இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன மற்றும் இலங்கை கடல்வள சேவைகள் ஆகியவற்றைத் தனியார் மயமாக்கல் போன்றவற்றில் இவர் வெற்றிகரமாக வாதாடியுள்ளார்.அடிப்படை மனித உரிமை மீறல்கள்இ நாடாளுமன்ற சட்டமூலங்களுக்கான சட்டமீளாய்வு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார்.கொழும்பில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றங்களை இவர் தடுத்து நிறுத்தியுள்ளார்
அரசியலில் சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார் 2012 மே மாதத்தில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெளிவிவகார மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டார்.2014 செப்டம்பரில் தமிழரசுக் கட்சியின் இரண்டு உதவிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.சுமந்திரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் த.தே.கூ வேட்பாளராகப் போட்டியிட்டு58043 விருப்பு வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளும்ன்றம் சென்றார்
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ஆரம்பத்தில் தேசியப் பட்டியல் மூலம் வந்தவர். கூட்டமைப்பில் உள்ள பலரும் இவரை தேசியப் பட்டியல் என்று கிண்டல் செய்வதும் வழக்கம். இருந்த போதிலும் 58,043 வாக்குகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு நிலையான அங்கத்தவராக இருந்து வந்ததுடன். சுரேஸ் பிரேமச்சந்திரன் வகித்த ஊடகப்பேச்சாளர் என்ற பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வகித்தார்.
இன்று இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கை அரசினதும் கிங்மேக்கர் ஆகவே காட்சிப் படுத்தப்பட்டுள்ளார். இதனுடைய செயற்பாடுகள் கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். காலப்போக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா இவர்களுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பையும், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பெற்றுக் கொள்ளுவார், அல்லது கைப்பற்றிக் கொள்ளுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்பதை அரசாங்கம் எந்தவொரு காலத்திலும் வழங்கப்போவதில்லை. அமைச்சுப் பதவிகளைப் பெற்றாவது அல்லது மாகானசபையின் ஊடாகவாவது தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் இறையான்மை அபிவிருத்தி போன்றவற்றை விடையங்களை கையாளுவதிலே திரு. சுமந்திரன் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்பொழுது சென்று கொண்டிருக்கின்ற பாதை தவறாகவே அமைகின்றது என்ற குற்றச்சாட்டு திரு. சுமந்திரன் அவர்களாளேயே உருவாக்கப்பட்ட ஒன்று. இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் வரும் வரை தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டமென்பது கிடைக்கப்போதில்லை. மாறாக முன்னால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களோ அல்லது ஏனை ஆயுதக்கட்சிகளோ வடகிழக்கில் பலம் பெறும் சூழல் உருவாகும்.
திரு. சுமந்திரன் அவர்களை துரோகி என்று கூறுகின்ற எவராக இருந்தாலும் அவரை விட ஒரு மேலே சென்று சர்வதேச உள்ளுர் விடையங்கள் தொடர்பில் திரு. சம்பந்தன், மாவை சேனாதிராஜா இருவர்களுக்கும் ஒத்தாசையாக செயற்படுவார்கள் ஆனால். அன்று திரு. கஜேந்திரகுமார் பொண்ணம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் இடத்தில். அல்லது அந்த வரிசையில் வருகின்ற எவராயினும் நிற்பார்கள். இன்று சுமந்திரன் அவர்களைக் குறை கூறுகின்றவர்கள் அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கொண்டு தமிழரசுக் கட்சிக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்தன் விளைவே இன்றும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றது.
திரு.சுமந்திரன் அவர்களைப் பொறுத்தவரையில் ஆயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவது என்பது தான் அவருடைய இலக்கு அந்த இலக்கையே தற்பொழுது இருக்கின்ற அரசாங்கமும் கொண்டிருக்கின்றது. ஒரு ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்பது சுமத்திரன் அவர்களின் நிலைப்பாடு. அது சாத்தியமாகலாம் அல்லது அசாத்தியமாகலாம்.
இருப்பினும் மக்கள் மனதில் இந்த மூன்று பேரும் இன்றும் துரோகிகளாகவே கருதப்படுகின்றனர். கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. சுமந்திரன் அவர்கள் மீது தமக்குள்ளேயே உறுமிக்கொண்டிருக்கின்றனரே தவிர. வெளிப்படையாக அவரின் தவறைச் சுட்டிக் காட்ட இவர்கள் தயங்கு கின்றனர். அடுத்த தேர்தலில் எங்களுக்கு ஆசனம் கிடைக்குமோ என்பது தான் இவர்களின் உள்ளக் குமுறல். திரு. சுமந்திரனை விடவும் நன்கு படித்த ஒரு சட்டத்தரணி வருவாராக இருந்தால் திரு. சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டி நேரிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாலும் மீண்டும் அவருக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும்.
ஆகவே துரோகிகள் இனங்காணப்படுவது அவசியமானதொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள் அனைவரும் தமிழினத்திற்குத் துரோகம் செய்கின்றார்கள். இதில் திரு.சுமந்திரன் மட்டும் துரோகி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், சுமந்திரன் இவர்களில் யார் துரோகி?