நுண்கடன் திட்டங்கள் தொடர்பாக ஆராய வந்துள்ள ஐ.நா அதிகாரி

131

ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு படுகடன் மற்றும் மனித உரிமைகள் துறைக்கான சுயாதீன நிபுணர் ஜூவ்ன் பாப்லோ போஹோஸலாஸ் கி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நேற்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அவரின் இலங்கை விஜயம் அமைகிறது.

இந்நிலையில் தமது விஜயத்தின் போது மனித உரிமைகள் என்பதில் இருந்து கடன் மற்றும் நிதித்துறை கடமைகள் தொடர்பில் ஆராய்வுகளை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களின் கடன் மற்றும் அது தொடர்பான கொள்கைகள் என்பவை தொடர்பிலும் அதனை ஒட்டிய மனித உரிமைகள் குறித்தும் தாம் ஆராயவுள்ளதாக ஜூவ்ன் பாப்லோ குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடன்படுகையின் போது நாட்டுக்குள் வரும் சட்டவிரோத நிதிகள் மற்றும் நுண்கடன் திட்டங்கள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் எதிர்வரும் தமது அறிக்கையை 2019 மார்ச் மாத ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

SHARE