நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளமையின் காரணமாக இன்றைய தினமும் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய காலை நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் அரை மணித்தியாலமும் மின்சாரம் தடைப்படவுள்ளது.
நுரைச்சேலை மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள இயந்திரத்தை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்காக விரைவான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக மின்சக்தி அமைச்சின் மேம்பாட்டு இயக்குநர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் நுரைச்சோலை மின் உற்பத்தி கட்டமைப்பில் இவ்வாறான செயலிழப்பினை எதிர்வரும் காலங்களில் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினாலே அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்தாலும், நாட்டில் முழுமையாக மின்சாரம் தடைப்படுவதனை தடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்ற்பத்தி நிலையத்தில் மூன்று சுழல் இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. அவற்றில் ஒன்று நாளை வழமைக்கு திரும்பி விடும் என மின்சக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.