நுவரெலியா மாவட்ட தனியார் குத்தகைகாரர்கள் மற்றும் ஊழியர்கள் நுவரெலியா மாவட்ட செயலக காரியாலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாக நகர் மற்றும் வெளிபுறங்களில் அதன் எல்லை பகுதிகளில் தனியார் குத்தகைகாரர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கான குத்தகை பணம் உரிய வேளையில் வழங்கப்படவில்லை எனவும் இவ்வாறு வழங்கப்படவுள்ள குத்தகை பணத்தினை கால தாமதம் இன்றி வழங்குவதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு அழுத்தம் தெரிவித்தே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
இவ்வார்ப்பட்டத்தில் 20 இற்கும் மேற்பட்ட குத்தகைகாரர்கள் மற்றும் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.