களுத்துறை பண்டாரகம நகரில் உள்ள பைகள் விற்பனை செய்யப்படும் கடை ஒன்றில் பைகளை கொள்வனவு செய்வது போல் சென்ற மூன்று பெண்கள் அங்கிருந்த கைப் பைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு கைப் பைகளை மிகவும் நூதனமான முறையில் கொள்ளையிட்டுள்ளனர்.
கடையில் வேலை செய்த ஊழியரை பெண்களுடன் வந்த கர்ப்பிணி பெண்ணே, கைப் பைகளை கொள்வனது செய்வது போல் விலைகளை விசாரித்து ஏமாற்றியுள்ளார்.
கர்ப்பிணி பெண் ஊழியருடன் பேச்சு கொடுக்கும் நேரத்தில் ஏனைய இரண்டு பெண்கள் பைகளை திருடும் காட்சி கடையில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.