கொடிகாமம் அல்லாரை தும்புத்தொழிற்சாலை தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களுக்கான சாண்றிதள் வழங்கும் வைபவம் தெழிற்சாலையில் நேற்று (04.04.15) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண்கள் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டு பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சாண்றிதள்களை வழங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
.jpg)
விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுகையில் – நூறு நாள் வேலைத்திட்டத்திலே மகளிரை வீட்டிலே முடங்கவிடாது பிரதேச செயளரும்,தேசிய வடிவமைப்புச்சபையும் கூடியபங்களிப்பை வழங்கியிருக்கின்றது.இவர்களின் பங்களிப்பு இல்லாதுவிட்டால் எமது பெண்கள் வீட்டினிலேதான் முடங்கிக்கிடக்க வேண்டும்.நீங்கள் குடுத்து வைத்திருக்கவேண்டும் ஏனென்றால் இதனால்த்தான் நான் உங்களுக்கு பெண்கள் விவகார பிரதி அமைச்சராக கிடைத்தது.இதை நான் வரவேற்க்கின்றேன்.ஏனென்றால் எனது மக்களுக்கும் என்னுடைய சகேதரிகளுக்ககும் உதவிசெய்யக்கிடைத்திருக்கின்றது.
.jpg)
இங்கு35 பெண்கள் வேலை செய்கிறார்கள் இத்தொகை இருமடங்காக்கவேண்டும். தும்புத்தொழிற்சாலைக்கென கச்சாயிலே காணி இருக்கின்றது இதுபற்றி கொழும்பிலிருந்து வந்திருக்கும் எனது இணைப்புச் செயலாளரின் கவனத்திற்க்கு கொண்டுவந்திருக்கின்றேன்.இக்காணி தொடர்பில் சாவகச்சேரி பிரதேசசெயளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியிருக்கின்றேன்.
.jpg)
இந்த அறிக்கையினை வடமாகாண ஆளுனரின் கவனத்திற்க்கு கொண்டுசென்று காணியை முதலில் உரியவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.இந்த இடத்திற்கு தும்புத்தெபழிற்சாலையை மாற்றவேண்டும்.
இதற்காக நாம் எமது வடமாகாணத்திலே அமைந்துள்ள இந்தியத்தூதுவர் ஆலயத்தினரிடம் தொடர்பு கொண்டு அதற்க்கான நிதியை பெற்று கட்டடத்தினை நிர்மானிக்க உதவியைக் கோரலாம்.
இதற்கென உள்ள இயந்திரங்கள் ஆறு வருடங்களின் முன்னர் வழங்கப்பட்டது அதுவும் பழுதடைந்து செல்வதாக அறியமுடிகிறது. இதற்கான உதிரப்பாகங்களை பொறுவதற்க்கு தான் ஆவண செய்வதாகவும் இந்த அல்லாரைக்கிராமத்தின் வீதிகள் மிகமோசமான நிலையில் உள்ளது இதற்க்கும் என்னிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர் இதற்கான நிதியை மத்திய அரசாங்த்திடம் நிதியைப்பெற்று தமிழ்த்Nதேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தவிசாளரிடம் கையளிப்பதாகவும் பிரதிஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதியளித்தார்.
அத்துடன தென்மராட்சி பிரதேசத்திலே மிகஅண்மைக்காரமாக களவுகள் அதிகர்த்துள்ளது இதுதொடர்பில் இப்பிரதோச பொலிஸ் அதிகார்யை சந்தித்து கலந்துரையாடினேன்.இது தொடர்பில் அறிக்கையொனண்றை சமர்கப்பிக்கும்படி கூறினேன் இரண்டு நாட்க்களில் தருவதாக கூறியும் ஒரு வாரமாகியும் சமர்ப்பிக்கப்படவில்லையென குற்றம் சுமத்தினார்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில் மேன்னைதங்கிய கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரின் ஆலோசணைக்கமைய வலிகாமத்திலே 470 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.மேலும் வருகின்ற 30ம் திகதிக்கு முன்னர் மேலும் 1000 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.
சும்மா இந்தக்காணிகள் விடுவிக்கப்படவிவில்லை,நாங்கள் உண்ணாவிரதம் இருந்துதான் இக்காணிகள் விடுவிக்கப்பட்டன.2 வருடங்களுக்கு முன்னர் வலிகாமத்திலே இடம்பெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்ச்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உண்ணரிரத போராட்டத்தில் கலந்துகொண்டார்.கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார் நாங்கள் ஆட்ச்சக்கு வந்தால் மக்களின் காணிகளை விடுவிப்போம் என்று உறுதியளித்தபடி இன்று மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படுகிறது என்று கூறினார்.
மற்று வேறு மக்கள் அரச காணிகளில் 30 வருடங்களாக காணி உறுதி இல்லாது வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அத்துடன் முல்லைத்தீவுக்கு மூண்று நாள் வேலைத்திட்டமாக சென்று தங்கியிருந்த போது போரினால் காலகளை இழந்து கைகளை இழந்து தமது அவையங்களை இழந்த எத்தனை பேரைச்சந்தித்தோம் இவையெல்லாம் கடந்த கால அரசினால் செய்யப்ப்ட்டது.அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜேசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ்,எனது கணவர் தி.மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் ஆகியோர் தமிழ் ஆயுதக்குழுக்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்னர் என கண்ணீர் மல்க நினைவுபடுத்தினார்.
இதெல்லாம் கடந்த மகிந்த அரசாங்கத்தின் காலத்திலேயே நிகழ்ந்தேறியது.அத்துடன் 2010ம் ஆண்டு தென்மராட்சியில் சாவகச்சேரி இந்துக்கல்லுரி மாணவன் பணத்திற்காக படுகொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் பின்புறத்திலேயே புதைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இதெல்லாம் அரசுடன் சேர்ந்தியங்கிய எலும்புக்கூடுகளான தமிழ் குழுக்களாலேயே மேற்க்கொள்ளப்பட்டது எனவே வருகின்ற தேர்தலில் இவர்களை தூக்கி எறியவேண்டுமென ஆவேசமாக மக்களிடத்திலே வேண்டுகோள் விடுத்தார்.

இந் நிகழ்வில்தேசிய வடிவமைப்புச்சபையின் பணிப்பாளர் கே.சந்திரசிறி,பிரதிப்பணிப்பாளர் சன்னப் பெரேரா,சாவகச்சேரி பிரதோச செயலர் அஞ்சலிதேவி சாந்தசீலன்,சாவகச்சேரி நகர சபைத் தலைவர்,சாவகச்சேரி பிரதேச சபைத்தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.