நூற்றாண்டு காலமாக நேராக மிதந்து கொண்டிக்கும் அதிசய மரக்குற்றி…

232

 

அமெரிக்காவின் Oregon பகுதியில் Crater எனப்படும் மிக ஆழமான நீரேரி காணப்படுகின்றது. இங்கு கடந்த 120 வருடங்களாக ஒரு மரக்குற்றி நேரான நிலையில் மிதந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

பட்ட நிலையில் உள்ள குறித்த மரத்தின் உயரமானது 30 அடிகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 அடி உயரம் மட்டும் நீர் மட்டத்திற்கு வெளியில் காணப்படுகின்றது. இதனை 1896ம் ஆண்டு Joseph Diller என்பவர் கண்டுபிடித்திருந்தார்.

மேலும் இந்த மரத்திற்கு 450 வயது இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த மரம் நீண்டகாலமாக அவ்வாறு காணப்படுவதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை அமெரிக்காவில் காணப்படும் மிக ஆழமான ஏரிகளில் Crater ஏரியானது 1,943 அடிகளைக் கொண்டு 9வது இடத்தில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE