நெஞ்சில் பயத்துடன் வாழும் சிறுவன்! ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடூர தண்டனைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு

601

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய சிரிய ஜனநாயகப்படையினர், Manbij நகரில் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.

Aleppo மாகாணத்தில் உள்ள Manbij நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் சிரிய ஜனநாயகப்படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில், அப்பகுதியில் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மக்கள் அனைவரும் டிரக் வண்டியில் பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுநாள் வரை தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அப்பெண்கள் அனைவரும் 24 மணிநேரமும் பர்தா அணிந்தபடியே இருந்துள்ளனர்.

அப்படி அவர்கள் பர்தா அணியாவிட்டால் தீவிரவாதிகளின் கொடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும். இந்நிலையில் அங்கிருந்து இவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுவிட்டதால், ஆனந்தம் கொண்ட தாய் ஒருவர் கண்ணீர் விட்டபடி தனது பர்தாவினை முகத்தில் இருந்து மேலே எடுத்துள்ளார்.

இதனைப்பார்த்த இத்தாயின் மகன், எங்கே பர்தா விலகினால் தனது தாயினை தண்டித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், தானாகவே முன்வந்து பர்தாவால் தனது தாயின் முகத்தினை மறைந்து விடுகிறான்.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்துவிட்டாலும், அவர்கள் அனுபவித்த சித்ரவதைகள், இச்சிறுவனின் மனதில் மறையா வடுவாக பதிந்து விட்டதால் இச்சிறுவன் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளான்.

SHARE