சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தத்தால் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த வாரமாக சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான யுத்தம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் செத்துமடிகின்றனர், இந்நிலையில் சிறுமி ஒருவர் தனக்கு நிகழவிருக்கும் ஆபத்தை அறியாமல் சந்தோஷமாக பாட்டு பாடிக்கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தனது வீட்டின் மெத்தையில் அமர்ந்து சந்தோஷமாக பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார், இதனை அந்த வீட்டின் உறுப்பினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது, இவர்கள் வீட்டிற்கு அருகாமையில் வெடிகுண்டு வெடித்ததில், மெத்தையில் அமர்ந்திருந்த சிறுமி, அந்த அறையில் இருந்து மற்றொரு அறைக்கு தூக்கி வீசப்படுகிறார்.
இரத்த காயங்களுடன் விழுந்து கிடக்கும் அச்சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்தபடி ஓடிச்சென்று மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.