நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் மீதான DNA சோதனை

257

கடந்த 2003 இல் Peru வின் Atacama பாலைவனத்தில் கடுமையாக நீட்சியடைந்த தலையையுடைய வன்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இச்சிறிய உடலானது வேற்றுக்கிரக வாசியினுடையதாக இருக்கலாம் என நம்பப்ட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட DNA சோதனை அந்த 15 சென்ரி மீட்டர் நீளமான எச்சமானது மனித கரு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் ஆய்வு மேற்கொண்டு கடந்த மார்ச் வெளியிட்ட விஞ்ஞானிகள் தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர், அவர்கள் ஆய்வு செய்த முறைக்காகவென.

சில தினங்களுக்கு முன்னதாக மற்றுமெரு குழுவொன்று முன்னைய ஆய்வு மீதான மதிப்பீட்டு கருத்துக்களை முன்வைத்திருந்தது.

இவர்கள் முன்னைய ஆய்வை விமர்சித்திருந்தனர். அதாவது முன்னைய ஆய்வு வெளிப்படுத்தியது போல் அது இயற்கைக்குப் புறம்பான உடலமைப்பல்ல. மாறாக யோனி பிறப்பின் போது அதன் தலை நீட்சியடைந்திருக்கலாம் என்கின்றனர்.

அதேநேரம் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தேவையற்றதொன்று மற்றும் நிதி முறைகளுக்கு அப்பாற்பட்டது என தற்போதைய ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

SHARE