நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்

283
மட்டக்களப்பு மாவட்டத்தின் காக்காச்சிவட்டை கிராமத்தில் உள்ள சின்னவட்டை வயல் நிலங்களில் உள்ள நெற்பயிர்களை காட்டு யானைகள் நாசம் பண்ணி வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் மேலும் தெரிவித்த பொது மக்கள், நாங்கள் மிகவும் கஸ்ரத்தின் மத்தியிலே விவசாயத்தில் ஈடுபட்டு அதனால் கிடைக்ககும் வருமானத்தினை கொண்டே எங்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றோம்.

நாங்கள் முற்றுமுழுதாக விவசாயத்தையே நம்பி வாழ்கின்றோம் காணிகளில் நெல்லை விதைத்து அவை பயிராகிய பின்னர் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து வயல்களை துவாம்சம் செய்து விட்டு வரம்புகளையெல்லாம் நாசமாக்கிவிட்டு செல்வதுதான் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

மிகவும் கஸ்ரப்பட்டு வயல்களில் தங்களது முழு நேரத்தையும் செலவழித்து உயிரை பணயம் வைத்து நெற்செய்கையில் ஈடுபட்டு நெல்லை வீடு கொண்டு சென்றால் யானை வீடு தேடிவந்து வீட்டையும், அங்கு இருப்பவர்களையும் அழிக்கின்ற செயற்பாடே எங்களது வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டு வருகின்றது.

அது மாத்திரமல்ல யானையினை வயல்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உரியவர்களுக்கு அறிவித்தால் அவர்கள் யானைகள் வயலை சேதப்படுத்தி சென்றதன்பின்,

அங்கு வந்து ஓரிரு வெடிகளை வைத்து விட்டு திரும்பி விடுவார்கள் அவ்வாறு இல்லாமல் யானை நிற்கும்போது வந்தால் எங்களுக்கு முன் ஆயுதத்தினை தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடிவிடுவார்கள் இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது.

இது தொடர்பாக அரசியல்வாதிகளிடம் கூறினால் அவர்கள் வீதியில் வந்து நின்று பார்த்து விட்டு அது தொடர்பாக உரியவர்களுடன் கதைக்கின்றோம் என்று கூறிவிட்டு வெறும் வாக்குறுதிகளை தந்துவிட்டு போவதும்,

தேர்தல் காலம் வந்தால் வாக்குக்கேட்டு வருவதுந்தான் வரலாறாகி விட்டது இவ்வாறுதான் எல்லாப்பக்கங்களாலும் ஏமாந்தவர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றோம் எனவும் அந்த மக்கள் தங்களது ஆதங்கங்களை எடுத்துக்கூறினார்கள்.

SHARE