நேபாளத்தில் இளவரசர் ஹரிக்கு உற்சாக வரவேற்பு: வழி நெடுகிலும் அலைமோதிய கூட்டம்!

298
பூகம்பத்தால் சிதைந்துள்ள நேபாலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரிக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.நேபாலத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இளவரசர் ஹரிக்கு 5 கன்னிப்பெண்கள் வரவேற்கும் சிறப்பு வழைபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் மற்றும் தூய்மையை குறிக்கும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட இளவரசர் ஹரிக்கு காவி நிறத்தினாலான பூக்களால் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்றுள்ளனர்.

கடந்த 200 ஆண்டுகளாக பிரித்தானியாவுடன் இணைந்து செயல்பட்டு வரும் நேபாள அரசு இளவரசர் ஹரிக்கு அளித்த சிறப்பு வரவேற்வின்போது,

பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த அவர், தம்மால் ஆகும் உதவியை நேபாள மக்களுக்கு செய்ய முனைப்பு காட்டவிருப்பதாக தெரிவித்தார்.

இளவரசர் ஹரி, தலைநகர் காட்மண்டுவின் அருகாமையில் அமைந்துள்ள உலக பாரம்பரிய தளமான Patan Durbar Square பகுதிக்கு வருகை தரும் பிரித்தானிய அரச குடும்பத்தின் 5-வது நபர் ஆவார்.

சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நேபாள நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான வித்யா தேவி பண்டாரியையும், பிரதமர் ஷர்மா ஒளியையும் சந்தித்துள்ளார்.

SHARE