நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்த நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளது.
நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.
நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக காட்மாண்டூ விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் நே- புனித, பாள்- குகை என்பது இதன் பொதுவான கருத்தாக உள்ளது.
நேபாளம் உலகில் மிக ஏழையானதும் அபிவிருத்தி குன்றியதுமான நாடுகளில் ஒன்றாகும். மக்கள் தொகையில் 38 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.
நேபாளம் நாட்டின் எல்லைகள் என்ன?
தெற்கே வெப்பமான தெராய்யும், வடக்கே குளிரான இமாலயம் கொண்ட புவியமைப்பு, நேபால் நாட்டின் பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. நேபாளம் 650 கிமீ நீளமும் 200 கிமீ அகலமும் கொண்ட அண்ணளவான ஒரு செவ்வக வடிவையுடைய நாடாகும்.
நேபாளம் பொதுவாக மூன்று தரைத்தோற்ற பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது: மலைப்பிரதேசம், குன்றுப் பிரதேசம் மற்றும் தராய் பிரதேசம் ஆகும்.
நேபாளம் நாட்டின் சிறப்புகள் என்ன?
இந்திய எல்லையில் காணப்படும் தராய் சமவெளிகள் இந்திய-கங்கை சமவெளியின் வட பகுதியாகும். இப்பிரதேசம் மூன்று முதன்மையான ஆறுகளால் வளமாக்கப்படுகின்றது.
அவையாவன கோசி, நாராயனி, கர்னாலி என்பனவாகும். இப்பிரதேசம் வெப்பமான ஈரப்பதன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது.
நேபாளத்தில் எட்டு கலாச்சார பண்பாட்டு உலகப்பாரம்பரியக் களங்களும், இரண்டு இயற்கை உலகப்பராம்பரியக் களங்களும் அமைந்துள்ளது. நேபாளத்தில் உள்ள சுற்றுலாத் துறையே நேபாளத்தின் முக்கிய வருவாயாக இருந்து வருகிறது.
நேபாளம் நாட்டின் சுற்றுலாத் துறையின் சிறப்புகள்?
இந்துக்களின் ஆன்மீகத் தலமாக புகழ் பெற்ற பசுபதிநாத் கோவில், சங்கு நாராயணன் கோயில் மற்றும் முக்திநாத் போன்றவை விளங்குகிறது. பௌத்தர்களின் புனித தலங்களாக லும்பினி, பௌத்தநாத்து மற்றும் கபிலவஸ்து இங்கு உள்ளது.
எவரெஸ்ட் சிகரம், கஞ்சன்சுங்கா மலை, அன்னபூர்ணா மற்றும் தவளகிரி மலைகள் மற்றும் மலையேற்ற வீரர்களையும், சித்வான் தேசியப் பூங்கா, சாகர்மாதா தேசியப் பூங்கா போன்றவை நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் ஈர்க்கும் இடங்களாகும்.
- நேபாளம் தேசிய மொழி எது? – Nepali
- நேபாளம் அழைப்புக்குறி எண்? – 977
- நேபாளம் இணையக்குறி என்ன? – .np
- நேபாளம் சுதந்திர தினம்? – 2008 May 28
- நேபாளம் நாட்டின் பரப்பளவு எவ்வளவு? – 147,181 km²
- நேபாளம் தேசியக் கொடி?
- நேபாளம் தேசிய நினைவுச் சின்னம்?
- நேபாளம் மக்கள் தொகை எவ்வளவு? – 28.51 million
- நேபாளம் பிரபலமான உணவு எது? – dal bhat
- நேபாளம் தேசியப் பறவை எது? – Himalayan monal
- நேபாளம் தேசிய விலங்கு எது? – Cow
- நேபாளம் தேசிய மலர் எது? – rhododendron
- நேபாளம் தேசிய மரம் எது? – Rhododendron
- நேபாளம் தேசிய விளையாட்டு என்ன? – Dandi Biyo
- நேபாளம் நாட்டின் நாணயம்? – நேபாள உரூபா (NPR)
- நேபாளம் சீனா தலைநகரம் என்ன? – Kathmandu