நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் போன்ற மலையாள கதாநாயகிகள் தற்போது தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்தான் திரிஷா.
தற்போது ஷியாம் பிரசாத் இயக்கும் “ஹே ஜூடு” என்ற படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம் திரிஷா. இந்த படத்தில் மலையாளத்தில் பிரேமம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை அளித்து முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலே உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் ஒயிட் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை ஏற்காமல் தள்ளிப்போட்டு வந்தார். பிறகு அந்த வாய்ப்பும் கைநழுவி சென்றது.
சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளும் அதே பாணியில் அமைந்துவிடும் என்பதால் மவுனம் காத்து வந்த திரிஷாவிற்கு இந்த படம் நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளது.
மேலும் மலையாள நடிகைகள் தமிழ் திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் திரிஷா மலையாள திரைக்கு சென்று இவர்களுடன் போட்டியில் குதிக்கவுள்ளார்.