நொய்டா மைதானத்தில் சர்வதேச போட்டி நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்கி உள்ளது.
டெல்லி அருகே உள்ள கிரெட்டர் நொய்டாவில் சாதித் விஜய்சிங் பத்ஹிக் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்கி உள்ளது.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நொய்டா மைதானத்தை ஆய்வு செய்த ஐ.சி.சி. அதிகாரிகள் உள்ளூர் போட்டி நடத்த அனுமதி வழங்கி இருந்தனர். கடந்த வாரம் மைதானத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் சர்வதேச போட்டி நடத்த வசதிகள் ஏற்படுத்தபட்டதால் அனுமதி வழங்கினர்.