(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் அட்டன் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்மையானால் குறித்த வீதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் ஒஸ்போன் பகுதியிலே 08.06.2018 அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண் சரிவினால் நோட்டன் அட்டன் வீதியின் போக்குவரத்து காலை 7 மணிவரை தடைப்பட்டதுடன் பிரதேச வாசிகளினால் சரிந்துவீழ்ந்த மண் மேட்டையும் மரக் கிளைகளையும் வெட்டிய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. எனினும் குறித்த வீதிக்கான போக்குரத்து ஒரு வழியாக இடம்பெற்று வருகின்றமையினால் அவதானத்துடன் வாகனங்ளை செலுத்துமாறு நோட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.