நோயற்ற சமூகத்தை கட்டியெழுப்ப மன்னார் பொது வைத்தியசாலையில் நடவடிக்கை

212

 

நோயற்ற சமூகத்தை கட்டியெழுப்பவும் சுகாதாரமான வைத்தியசாலையை உருவாக்கும்நோக்கில் மாபெரும் சிரமதானம் இன்று  மன்னார் பொது வைத்தியசாலையில் மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை தலைமையில் நடைபெற்றது.

குறித்த சிரமதானத்தை மன்னார் ஆயர் இல்லம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதற்கு பல்வேறுபட்ட நபர்கள் மற்றும் திணைக்களங்கள் உதவி வழங்கியிருந்தன.

நீண்ட நாட்களாக மன்னார் பொது வைத்தியசாலையின்; வளாகத்தில் உள்ள குறைபாடுகளை கவனத்தில் எடுத்துகொண்ட மன்னார் ஆயர் இல்லம் இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்படி மன்னார் மாவட்டத்தின் சகல தேவாலய பங்குகளில் இருந்தும் வந்திருந்த மக்களுடன், கடற்படையினர், இராணுவம், பொலிசார், செங்சிலுவை சங்க தொண்டர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து 23 ஏக்கர் வைத்தியசாலை வளாகத்தை 25 பிரிவுகளாக பிரித்து அப்பகுதியினை துப்பரவு செய்யும் பணி இன்று காலை 8;:30 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன், வட மாகாண சபை உறுப்பினர்களான பிறிமூஸ் சிராய்வா,ஞானசீலன் குணசீலன், றிப்கான் பதியூதீன், மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்டான்லி டி மெல்,மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜே.ஜே.கனடி, வட மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் திருமதி.யூட் றதினி, வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி ஆணையாளர் துரம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், படைபிரிவினர் உள்ளிட்ட பலர் இவ்; சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SHARE