நோய்களினால் மரணங்கள் மற்றும் அங்கங்களின் செயலின்மை அதிகரித்துள்ளது குழந்தை மருத்துவ நிபுணர் சித்திரா வாமதேவன்

244

வியாதிகளினால் ஏற்படும் மரணங்கள், அங்கங்களின் செயலின்மை தற்போது             அதிகதித்துள்ளது என மட்டக்களப்பு வைத்திய சங்கத்தின்புதிய தலைவராக        பதவியேற்றிருக்கும் குழந்தை மருத்துவ நிபுணர் சித்திரா வாமதேவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்திய சங்கத்தின் புதிய தலைவருக்கான -2016 பதவி சூட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (21)மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்பு அவர் மேலும் கூறுகையில், தொற்றா நோய்களான இருதய நோய்கள், நீரழிவு, விபத்துக்கள், தற்கொலைகள், டெங்குபோன்ற பரவலாக இருக்கும் தொற்று நோய்கள்என்பன தற்போது எமது சமூகத்தில் பாரிய சவாலாக உள்ளது.

நவீன தொழில் நுட்ப உபயோகங்களைப் பயன்படுத்தி வியாதிகளை வரும் முன்பே  தடுத்து சுகமளிக்கும் திட்டங்கள்இ துரத்தில் இருக்கும்மூலை முடுக்குகள் எல்லாவற்றிக்கும்  இந்த நிவாரணங்கள் சென்றடைய வைத்தல் மற்றும் இக்கட்டான நிலமையிலும் சான்றுகள் வைத்து செய்யும் ஆராய்ச்சிகளின் விளைவுகள்தான் எமக்கு மருத்துவ  சேவைக்குத் தேவையுமானது.

1972 இல் வைத்தியக் கலாநிதி ஜெகா பசுபதியின் தலைமையில் மட்டக்களப்பு மருத்துவ சங்கம்  ஆரம்பிக்கப்பட்டது. 2004- சுனாமிஇ 1978-சூறாவளி, 2007- யுத்தத்தால்  உள்நாட்டில்  இடம்பெயர்வு  போன்ற மக்களின் இக்கட்டான காலகட்டங்களில் பாரிய மனிதாபிமான பாரியஉதவிகளை  வைத்திய சங்கத்தின் வைத்தியக் கலாநிதிகள் உள்ளிட்ட மருத்துவர்கள் செய்திருப்பதைக்கண்டு  குறித்த சங்கத்தின் தலைமைகிடைத்திருப்பதைக் கண்டு மகிழ்வதோடு பாரிய பொறுப்பையும்  ஏற்றுள்ளேன்.

எத்தனையோ மேடு பள்ளங்களைச் சந்தித்திருந்தாலும் பொது மனிதாபிமானப் பணிகளை  மருத்துவ அதிகாரிகள் சரிவரச் செய்துள்ளார்கள்இசமூகத்திற்கு சேவை செய்யும்  மருத்துவர்களின் தொழில் சார்ந்த மேம்பாட்டுக் கல்வியை வழங்குவதில் மருத்துவச் சங்கம்  முன்னின்று உழைத்துள்ளது எனத்தெரிவித்தார்.

விடுகை பெற்றுச்செல்லும் தலைவர் வைத்தியக் கலாநிதி வி. ஜீவதாஸ் தெரிவு செய்யப்பட்ட  புதிய தலைவருக்காக பதக்கத்தைஅணிவித்தார். கிழக்குப் பல்கலைக் கழக தகுதிகாண்  அதிகாரி பேராசிரியை உமா குமாரசாமிக்கு புதிய தலைவர் ஞாபச் சின்னம் ஒன்றை                                    வழங்கிவைத்தார்.

கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கே.ரி. சுந்தரேசன், 2017 ஆம்  ஆண்டிற்கான புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டவைத்திய கலாநிதி கே. சிவகாந்தன் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எல்.எம். நவரட்ணராஜா, சத்திர  சிகிச்சை  நிபுணர் பி. ஜீபரா வைத்திய கலாநிதி  வி. விவேகானந்தராஜா  உள்ளிட்ட  வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர் (படங்களும் தகவலும் :- சுபஜன்)

3e1964a0-3bdf-4546-8bd7-c24f487e6203 3f2c8698-85c4-4286-9fec-a03a226fc6a7 107f7fb5-5fe3-4d55-802d-1193af2d2c88 33993efb-56fa-426a-996d-1a809cbe7437 c451c363-b7e7-4653-abe0-122f385e4790 d78fcd6f-86e9-4033-9058-83deaaab9a37 da8cf324-be83-41f4-b367-f147553e74ea f6aef51b-2fe3-4410-bf3d-e1f8cc983544

SHARE