நோர்வூட் பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு அட்டன் மாவட்ட நிதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
28.03.2016 அன்று மாலை நோர்வூட் கெசல்கமுவ ஓயாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சம்பவயிடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தவிட்டார்.
திடீரேன பெய்த அடை மழையின் ஆற்று வெள்ளத்தில் மீட்கப்பட்ட மேற்படி சடலம் அடையாளம் இதுவரையில் காணப்படவில்லை என்றும் நீதவானின் உத்தரவிற்கமைய. பிரேத பரிசோதணைக்காக சடலத்தை நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்