நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கெ பிரன்டே ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

313

 

நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

நோர்வே வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கெ பிரன்டே ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம்செலுத்தப்பட உள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் நோர்வே தூதரகத்திற்கும் இடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசேட பேச்சுவார்த்தையிலும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க உள்ளார். இலங்கையில் நோர்வே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ம் ஆண்டில் இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் 30 மில்லியன் அமெரக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அபிப்பிராயங்கள்

இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்

அபிப்பிராயத்தை இணைக்க

பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.

SHARE