நோர்வே தமிழ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த வருடம் 6வது திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவிருக்கிறது.
கடந்த 5 வருடங்களாக தமிழ் மொழியில் வெளிவந்த முழு நீளப்படம், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசைப்பாடல் காணொளி, அனிமேஷன் ஆகியவற்றோடு தமிழர்களின் முழு நீளப்படங்களுக்கான போட்டிகள் நடைபெற்று அதில் 30 வகையான பிரிவுகளில் தொடர்ந்து தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஓர் புதிய பிரிவாக உலக நாடுகளின் சினிமாவுக்கான குறும்படம், ஆவணப்படம், முழு நீளப்படம் ஆகியவற்றிற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆண்டு சிறப்பு திரையிடலாக, சீனாவின் VINCENT என்னும் குறும்படமும், TAKAO DANCER என்னும் முழு நீளப்படமும், சரஜெவோவின் FINDING FAMILY என்னும் ஆவணப்படமும், ரஷ்யாவின் MY GURU என்னும் ஆவணப்படமும், டென்மார்க்கின் INLUSIO என்னும் குறும்படமும் திரையிடவிருக்கிறது.
தேர்வு செய்யப்பட்ட படங்களின் விவரங்கள்:
NTFF 2015 முழுநீளத் திரைப்படங்கள் – தமிழ்நாட்டில் இருந்து தெரிவானவை:
- சிகரம் தொடு – இயக்குனர் கௌரவ்
- ஜிகர்தண்டா – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
- கயல் – இயக்குனர் பிரபு சாலமன்
- குக்கூ – இயக்குனர் ராஜு முருகன்
- கதை திரைக்கதை வசனம் இயக்கம் – இயக்குனர் ரா.பார்த்தீபன்
- ராமானுஜன் – இயக்குனர் ஞானசேகரன்
- நான் தான் பாலா – இயக்குனர் ர.கண்ணன்
- தேன்கூடு – இயக்குனர் இகோர்
- காவிய தலைவன் – இயக்குனர் வசந்தபாலன்
- தெகிடி – இயக்குனர் பி.ரமேஷ்
- காடு – இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம்
- குற்றம் கடிதல் – இயக்குனர் பிரம்ம.ஜி
முழுநீளத் திரைப்படங்கள் – உலக தமிழ் சினிமா (புலம்பெயர் தேசம்):
- ஒஸ்லோ (நோர்வே) – இயக்குனர் ஸ்டீபன்
- உயிர்வரை இனித்தாய்(டென்மார்க்) – கே.எஸ்.துரை
- சிவ சேனை (லண்டன்) – என். ராதா
குறும்படம்/ஆவணப் படம்/முழுநீளத் திரைப்படம் – உலக சினிமா அனைத்து மொழி:
- வின்சென்ட் – (குறும்படம் – சீனா ) -இயக்குனர் வென் -சிங் ஹோ & ஹ்வாங் ஔசுல்
- ஆவணப்படம் – பொஸ்னியா – இயக்குனர் ச்ரிஸ் லெஸ்லி
- மை குரு – (ஆவணப்படம் – ரஷ்யா ) – விக்டர் க்ரிபேர்மன்
- டகோ டான்சர் – (முழுநீளத் திரைப்படம் – சீனா இயக்குனர் வென் -சிங் ஹோ & ஹ்வாங் ஔசுல்
- இன்லுசியோ – (குறும்படம் – டென்மார்க்) – வில்லியம் ருட்பெக் லிந்தர்ட்ட்
தமிழ் குறும்படங்கள்:
- தழும்பு – இயக்குனர் மதிசுதா
- சாணி யூத்தம் – இயக்குனர் கௌசிக் ரங்கநாதன்
- புத்தாண்டு பரிசு – வ.கௌதமன்
- வேட்டி – வ.கௌதமன்
- மௌன விழித்துளிகள் – இயக்குனர் ராம் இளங்கோ
- அப்பால் – இயக்குனர் மாதவன் மகேஸ்வரன்
- உறவுகள் – தஸ்லீம் கான்
- ஆழி – இயக்குனர் எஸ்.எ.நிலான்
- தி செகண்ட் வின்னர்
- கிராம வழி
- அழை
- பசி
- தெய்வா
- தமிழ்
- தற்கொலை
NTFF 2015 தமிழ் ஆவணப்படங்கள்:
- கரகம் – மதிசுதா
- கண்ணாடி பொம்மைகள் – இயக்குனர் வெங்கடேஷ் குமார்
- குதியம் கவே – இயக்குனர் ரமேஷ் யந்த்ரா
- சல்மா – கிம் லோங்கிநோட்டோ
NTFF 2015 தமிழ் இசைப்பாடல் காணொளி:
- மழை நிலா(விசேட திரையிடல்) – தி ப்ரியந்தன்
- நீ தந்த காயங்கள் – தி ப்ரியந்தன்
- எங்க வீதி அழகி – எஸ்.எ .நிலான்
- பிரெஞ்சு பூக்கள் – இயக்குனர் ஈஸ்வரகுமார்
- என் உயிரை – தி சதீஷ்காந்த்
NTFF 2015 தமிழ் அனிமேஷன்:
- பார்க்க முடியாததில் இருந்து பார்க்ககூடியது
- அலைபேசி