பங்களாதேஷில் போதவைஸ்து கடத்தலுக்கு எதிராக இருவாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 102 க்கும் மேற்பட்ட போதைவஸ்து கடத்தற்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் கடந்த15 ஆம் திகதி போதைவஸ்து கடத்தற்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமானது முதல் இதுவரை அந்தக் கடத்தலுடன் தொடர்பு கொண்டிருந்த 15,000 பேரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 102 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 10 க்கும் மேற்பட்ட போதைவஸ்து கடத்தற்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுட்டுக் கொல்ப்பட்டவர்களுள் ஒரு பகுதியினர் பொலிஸாரின் துப்பக்கிப் பிரயோகத்தில் பலியானதுடன் ஏனையவர்கள் போதைவஸ்து கடத்தற்கார குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கி சமரில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கை அக் கடத்தலை முழுமையாக கட்டுப்பாடுக்குள் கொண்டு வரும் வரை தொடரும் என அந் நாட்டு உள்துறை அமைச்சர் அஸாதுஸ்ஸமான் கான் தெரிவித்தார்.