சிங்கங்களுக்கு திருமணம் செய்து கொண்டாடிய நிகழ்வு ஒன்று பங்களாதேஷ் மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 400 விருந்தினர்கள் பங்கேற்க பலூன்களுக்கு இடையே “நோவா” எனும் பெண் சிங்கத்திற்கும், “நபா” எனும் புதிதாக வந்துள்ள ஆண் சிங்கத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வுதான் என்றாலும் மிருகக்காட்சி சாலையை அலங்கரிக்கவும், சிங்கங்களை வரவேற்கும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்குழந்தைகளை மகிழ்ச்சியளிப்பதற்காக திருமணத்திற்கு முன்னதாக நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திருமண நிகழ்ச்சில், 10 கிலோ எடையுள்ள இறைச்சியிலான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாட்டு இறைச்சி, சிக்கன், முட்டை மற்றும் வறுத்த லிவர் கொண்டு இந்த கேக் தயார் செய்யப்பட்டுள்ளது. நோவா 11 வருடங்களாக சிட்டகாங் மிருகக்காட்சி சாலையில் வளர்ந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.