பசில், கோத்தபாய உட்பட முன்னாள் முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்கு?

292

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, காமனி சேனாரத்ன உட்பட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டமூலத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தீவிர மோசடி அலுவலக நிபுணர்களின் அறிவுரைகளுக்கமைய மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் முடிவாக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதென்பது சிக்கலான பணி என்பதனால் மேற்படி நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுகொள்வது அவசியம் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விசாரணை சிக்கல் என்பதனாலே பயிற்சிபெற்ற பிரித்தானிய நிபுணர்களின் ஆதரவு அவசியமாக இருந்தது.

கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு பல விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

SHARE