நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மனுவிற்கான பிரதிவாதிகள் தரப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தரப்பு மனுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதன் பின்னர் மனு தொடர்பான விசாரணை அடுத்த வருடம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும் என ஈவா வனசுந்தர தலைமையிலான நீதியரசர்கள் குழு அறிவித்துள்ளது.