பஞ்சம் பிழைக்க வந்த சீமை நூல் வெளீயீடு

337

எல்லை முனியான்டி திடலில் பஞ்சம் பிழைக்க வந்த சீமை

வட்டவலை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

தென்னாட்டு தமிழர்கள் பெருந்தோட்ட பயிர்செய்கைக்காக இலங்கைக்கு வந்த துயரம் நிறைந்த நெடுங்கதையை கொண்ட இந்நூல் வெளீயீட்டு விழா 10.04.2016 ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு  ஆரம்பமாகும்.

மலைய சமூகத்தின் கடந்த கால வரலாற்றை சொல்லும் சுமைதாங்கி கல்லை முகப்பு படமாக கொண்ட இந் நூல் வெளியீட்டு விழா மீனாட்சி தோட்ட தொழிலாளி இராஜேஸ்வரி மகேஸ்வரனின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும்  நிகழ்வில் பிரதம அதிதியாக இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் திலகராஜ் கலந்துகொள்வார்.

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலைக கலை பண்பாட்டு மன்றமும் ஏற்பாடு செய்துள்ள மேற்படி நிகழ்வில்   வரவேற்புரையை புவனேஸ்வரனும் நூல் அறிமுகவுரையை ஜீவன் ராஜேந்திரனும் நிகழ்த்துவர்.

நூலின் ஆய்வுரையை  சூரியகாந்தி பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம்  சிவகுமார் மற்றும் ஆசிரியர் பொன் பிரபாகரன் ஆகியோரும் கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும் ஏற்புரையை நூலாசிரயரும் நிகழ்த்துவர்  நிகழ்வின் இறுதியாக நூலின் சிறப்பு பிரதிகள் வினியோகத்துடன் சுபாசந்திரனின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெறும் இலக்கிய சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

f2fb3523-7d8b-4839-9dec-787b13c388d0

SHARE