
மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட், ஜோஸ்பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். டிம் சவுதி, மெக்லெனஹான், குணால் பாண்ட்யா, ஹர்பஜன்சிங் ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி, புனே, குஜராத், டெல்லி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மட்டும் வெற்றி கண்டது. கடைசி லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் எம்.விஜய், டேவிட் மில்லர், ஹசிம் அம்லா, மார்கஸ் ஸ்டோனிஸ், அக்ஷர் பட்டேல் ஆகியோர் துடிப்புடன் உள்ளனர். சந்தீப் ஷர்மா, மொகித் ஷர்மா ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.
மும்பை அணி, பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றி உத்வேகத்தை தொடர இந்த ஆட்டத்திலும் மும்பை அணி முனைப்பு காட்டும். பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.