படகிலிருந்து விழுந்த குடும்பத்தவரான மீனவரைக் காணவில்லை

130

கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைக் காணவில்லையென வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து குறித்த மீனவர் தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாகரை புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி பிரதேச மீனவர்களால் தமக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வருவதாக பிரதேச அனர்த்த நிவாரண  சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன் தெரிவித்தார்.

குறித்த இச்சம்பவம் தொடர்பில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE