படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை.

207

படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை.

படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.

இவரது குடும்பம் இப்போதும் உடம்பில் வசித்துவரும் நிலையில், இவர் மிகவும் அபாயகரமானதாக எச்சரிக்கப்படும் படக்குப் பயணம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்திரேலிய மண்ணை அடைந்தார்.

அகதி அந்தஸ்துக்க்கோரி விண்ணப்பித்திருக்கும் யுகேந்திரன் சின்னவைரன் என்ற இந்த வீரன், கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ‘D’ பிரிவு ஆட்டத்தில் டார்வின் அணிக்கெதிரான போட்டியில்,ட்ரஸி கிராம அணி சார்பில் பங்கெடுத்தார்.

40 ஓவர்கள் மட்டுப்படுத்திய இந்த போட்டியில் 18 சிக்ஸர்கள் , 14 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 227 ஓட்ட்ங்கள் பெற்று அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்டே தனது உயிர் எனவும் மிக சிறந்த கிரிக்கெட் வீரனாக மிளிர்வதே தனது லடசியம் எனவும் குறிப்பிடும் யுகேந்திரன், இலங்கையில் 19 வயதுக்குட்ப்பட்ட மென்பந்து கிரிக்கெட்அணியில் 2008, 2009 ம் ஆண்டுகளில் இடம்பிடித்தவர் எனவும் அறியக் கிடைக்கிறது

SHARE