சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி உயிழந்துள்ளனர்.
சூடான் தலைநகர் பகுதியிலிருந்து 750 கிலோ மீற்றர் வடக்கே அமைந்த நைல் நதியில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் பழுதாகி நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணம் செய்த பாடசாலை சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.