இலங்கை கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளான நிலையில், காப்பாற்றப்பட்ட 3 வெளிநாட்டவர்களையும் நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சோமாலிய நாட்டவர்கள் மூவரை நாடு கடத்துமாறு காலி பிரதான நீதவான் நேற்று உத்தவிட்டுள்ளார்.
இலங்கை கடலில் இருந்து 107 கடல் மைல் தூரத்தில் விபத்துக்குள்ளான குறித்த மூவரையும் இலங்கை கடற்படையினர் காப்பாற்றி காலி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவர்கள் விபத்துக்குள்ளான படகு மற்றும் இயந்திரத்தை விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், குறித்த மூவரையும் நாட்டை விட்டு வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி குறித்த மூவரும் காப்பாற்றப்பட்ட நிலையில், நேற்று வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.