படப்பிடிப்பு தளத்தில் நடந்த அசம்பாவிதம், அஜித் செய்த செயல்- நெகிழும் பிரபல சீரியல் நடிகை

158

அஜித்துடன் நடித்தவர்கள் அனைவரும் அவரை பற்றி சொல்லும் போது நமக்கு அப்படியே ஆசை வரும். ஒருநாளாவது அவரை பார்க்க வேண்டும் என்று இருக்கும்.

அண்மையில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷர்மிளா அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர், சிட்டிசன் படப்பிடிப்பில் ஒரு தொழிலாளிக்கு அடிபட்டுவிட்டது, ஒரு மருத்துவராக அப்போதைக்கு மட்டும் சிகிச்சை அளித்து பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டோம், அப்போது அஜித் அவர்கள் படப்பிடிப்பில் இல்லை.

அந்த நாள் இரவு 10.30 மணியளவில் எனக்கு போன் வருகிறது, அஜித் சார் பேசினார். படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிபட்டுவிட்டது என்று கேள்விபட்டேன் இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்றார். நான் தேவையான சிகிச்சை அளித்திருக்கிறேன் என்றேன்.

ஒரு பெரிய நடிகர் அவரை பற்றி கேட்கும் அவசியம் இல்லை, அந்த அனுபவம் என்னால் மறக்க முடியாது, படப்பிடிப்பில் கூட ஒரு பெரிய நடிகர் என்று இல்லாமல் அனைவருடனும் மிகவும் சாதாரணமாக பேசுவார் என்றார்.

SHARE