”படம் உண்மையாகவே வேற லெவல்” தளபதி விஜய் பாராட்டிய நடிகர்

338

தளபதி விஜய் எப்போதும் வளரும் நடிகர்களை பாராட்ட தவறியது இல்லை. அந்த வகையில் சமீபத்தில் ஸ்டண்ட் நடிகர் தீனாவை விஜய் பாராட்டியுள்ளார்.

தீனா ஏற்கனவே விஜய்யுடன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது தளபதி-63லும் நடித்து வருகின்றார்.

இவர் வடசென்னை படத்தில் நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது, அந்த படத்தை விஜய் சமீபத்தில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு தீனாவை அழைத்து ‘படம் உண்மையாகவே வேற லெவல், உன் நடிப்பும் வேற லெவல், கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவாய்’ என பாராட்டினாராம்.

SHARE