படம் ஓடல, அதிக நஷ்டம்.. திடீரென காணாமல் போன நடிகர்

98

 

தமிழ் சினிமாவில் சின்ன படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகம் சமயங்களில் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறார்கள். அந்த படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் வருவதும் குறைவு என்பதும் நஷ்டத்திற்கு பெரிய காரணம்.

பூ போன்ற காதல் என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார் கிருஷ்ணகிரியை சேர்ந்த எல்.வி. சுரேஷ்.

காணாமல் போன நடிகர்
அந்த படத்தை பல லட்சம் கடன் வாங்கி அவர் தயாரித்து இருந்த நிலையில் படத்தை பார்க்க தியேட்டருக்கு யாரும் வரவில்லை. என் படத்தை பார்க்க மக்கள் வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் எல்.வி.சுரேஷ் காணாமல் போய்விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE