படவரைஞர் செய்த தவறால் பொலிஸ் நிலையம் அலையும் குடும்பங்கள்!

167
படவரைஞர் செய்த தவறால் ஒரே காணிகளை கொள்வனவு செய்த குடும்பங்கள் மத்தியில் வீடுகளுக்கான பாதை தொடர்பில் தகராறு இடம்பெற்றுவருவதாக குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவந்ததாவது
யாழ்ப்பாணம் நல்லுர் பிரதேசத்தில் அமைந்துள்ள தம்புலேன் ஆடியபாதம் வீதியில்   சுமார் 10 பரப்பு காணி 6 குடும்பங்களுக்கு பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இக்காணி உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு விற்கப்பட்ட காணிகள்  நில அளவையாளர் ஒருவரின்; உதவியுடன் காணி வரைபடம் வரையப்பட்டது. இவ் வரைபடத்தின் அடிப்படையில் காணி உரிமைப் பத்திரங்கள் சட்டத்தரணி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணியில் குடியேறிய குடும்பத்தினர் மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டுவருகின்றது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது ஒரு தரப்பினருடைய காணி வரைபடத்தில் காணிகளிற்கு முன்னால் 10 அடி பாதை உள்ளதாகவும் மறு தரப்பினருடைய காணிகளிற்கு பின்னால்  10 அடி பாதை குறிக்கப்படாமலும் உள்ளது. தமக்குரிய பாதையை விட்டுத்தரும்படி ஒரு தரப்பினரும் 10 அடி பாதையை விட்டுகொடுக்க முடியாத நிலையில் மறுதரப்பினரும் உள்ளதால் இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு வருகின்றது. இவ் முறுகல் நிலையால்  பொலிஸ்நிலையத்திற்கு அடிக்கடி சென்று வருவதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
காணி படவரைஞர் செய்த தவறால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; இதற்கான தீர்விற்காக நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE